ஷாகிப் சுழலில் சிக்கியது ஆப்கானிஸ்தான்: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது வங்கதேசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஷாகிப் 5 விக்கெட்டுகள் வீழ்த்த வங்கதேசம் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
நன்றி: டிவிட்டர்/ஐசிசி
நன்றி: டிவிட்டர்/ஐசிசி


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஷாகிப் 5 விக்கெட்டுகள் வீழ்த்த வங்கதேசம் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்தது. 

வங்கதேசம் பேட்டிங்: http://bit.ly/2Y5S3wc

263 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மத் ஷா 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஷாகிப் சுழலில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹஷ்மதுல்லா ஷாகிதி 11 ரன்களுக்கு மொசாதெக் ஹூசைன் பந்தில் ஆட்டமிழந்தார். 

நிதானமாக விளையாடினாலும், ஓரளவு ரன் சேர்த்த கேப்டன் குல்பதின் நைப் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாகிப் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பயம் காட்டிய நபி, இந்த ஆட்டத்தில் 2-வது பந்திலேயே ஷாகிப் ஓவரில் போல்டானார். இப்படி அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு கூட பாட்னர்ஷிப் அமைக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

சமி உல்லாஹ் ஷென்வாரி மற்றும் நஜிபுல்லா ஸத்ரான் இணை மட்டுமே 7-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. இந்த இணையையும் ஷாகிப் அல் ஹசன் பிரித்தார். நஜிபுல்லா 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனால், ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஷென்வாரி அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதன்மூலம், வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் 5 விக்கெட்டுகளையும், முஸ்தபிஸூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், சைஃபுதின் மற்றும் மொசாதெக் ஹூசைன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், வங்கதேச அணி 7 புள்ளிகளைப் பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com