உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள்: வார்னரை முந்தினார் ஷகிப் அல் ஹசன்!

இன்று 23 ரன்கள் எடுத்தபோது அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு நகர்ந்தார்...
உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள்: வார்னரை முந்தினார் ஷகிப் அல் ஹசன்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வரும் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன், இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த ஆட்டத்துக்கு முன்பு, 2019 உலகக் கோப்பைப் போட்டியில் ஷகிப் எடுத்துள்ள ரன்கள்

75, 64, 121, 124*, 41.

நேற்று வரை, 6 ஆட்டங்களில் 447 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் வார்னர். 425 ரன்களுடன் 2-ம் இடத்தில் இருந்தார் ஷகிப். இந்நிலையில் இன்று 23 ரன்கள் எடுத்தபோது அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு நகர்ந்தார். இதனால் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இந்திய வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா, 320 ரன்களுடன் முதலிடத்திலும் கோலி 244 ரன்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். 

2019 உலகக் கோப்பை - அதிக ரன்கள்

எண்   பெயர் இன்னிங்ஸ் ரன்கள் சதங்கள்  அரை   சதங்கள்  சிக்ஸர் 
 1.

 ஷகிப் அல் ஹசன்   (வங்கதேசம்)

 6* 448*  2  2  2
 2. வார்னர்   (ஆஸ்திரேலியா)  6 447  2  2  6
 3. ரூட் (இங்கிலாந்து)  6 424  2  3  2
 4. ஃபிஞ்ச்   (ஆஸ்திரேலியா)  6  396  1  3  16
 5. வில்லியம்சன்   (நியூஸிலாந்து)  4  373  2  1  2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com