சுடச்சுட

    

    ஆப்கானிஸ்தானை எளிதாக வென்ற வங்கதேச அணி: ஹைலைட்ஸ் விடியோ

    By எழில்  |   Published on : 25th June 2019 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    shakib8133

     

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேசம்.

    அரையிறுதி வாய்ப்பை பெறும் முனைப்பில் உள்ள வங்கதேச அணியும், ஒரு வெற்றி கூட பெறாத ஆப்கன் அணியும், செளதாம்ப்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. முதலில் ஆடிய வங்கதேசம் 262/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடி ஆப்கானிஸ்தான் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பேட்டிங்கிலும் 51 ரன்களை விளாசிய ஷகிப் அல் ஹசன், அபாரமாக பந்துவீசி 5-29 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்தியும், 50 ரன்கள் விளாசிய சாதனையை யுவராஜ் சிங் செய்திருந்தார். தற்போது வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனும் அச்சாதனையை சமன் செய்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது வங்கதேசம். அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai