சுடச்சுட

  

  மீண்டும்  சதமெடுத்தார் ஃபிஞ்ச்: 300 ரன்களைக் குவிக்குமா ஆஸ்திரேலிய அணி?

  By எழில்  |   Published on : 25th June 2019 05:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  finch_eng1

   

  2019 உலகக் கோப்பைப் போட்டியில் அனைவரும் எதிர்பார்க்கும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லாட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள். நாதன் லயன், ஜேசன் பெஹ்ரென்டார்ப் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

  புள்ளிகளில் பட்டியலில் 6 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 2-ம் இடத்திலும் 6 ஆட்டங்களில் 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4-ம் இடத்திலும் உள்ளன.

  லார்ட்ஸ் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தது. இதனால் எப்போதும் ஸ்லிப் பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு ஃபீல்டர்களாவது இருந்தார்கள். இந்த நிலையில் ஆஸி. தொடக்க வீரர்களுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் ஃபின்சும் வார்னரும் பக்குவமாக விளையாடி சவாலை எதிர்கொண்டார்கள். 10 ஓவர்கள் வரை இந்த ஜோடி 44 ரன்கள் சேர்த்தது. அதிக ரன்கள் சேர்க்காமல் போனாலும் தாக்குப் பிடித்து ஆடி முதல் தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றினார்கள். 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். இந்த உலகக் கோப்பையில் இந்த ஜோடி 6-வது முறையாக இந்த இலக்கை எட்டியுள்ளது. 

  வேகப்பந்துவீச்சாளர்களால் எதுவும் செய்ய முடியாததால் சுழற்பந்துவீச்சாளர் மொயீன் அலியை அழைத்தார் மார்கன். அடுத்ததாக ரஷித்தும் களமிறங்கினார். எனினும் 22 ஓவர்கள் வரை இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. அரை சதமெடுத்த வார்னர், மொயீன் அலி பந்துவீச்சில் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் இங்கிலாந்து வீரர்கள். ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்கிற பட்டியலில் 642 ரன்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்கள் ஃபிஞ்ச் - வார்னர். இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டத்திலும் இவர்கள் அமைத்துத் தரும் அடித்தளமே ஆஸி. அணிக்குப் பெரிய பலமாக அமைகிறது. 

  இதன்பிறகு ஆட வந்த கவாஜா, 9 ரன்களில் வெளியேறியிருக்கவேண்டும். ஆனால் நல்ல ஸ்டம்பிங் வாய்ப்பை பட்லர் தவறவிட்டதால் தப்பித்தார். ஆனாலும் இந்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 23 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் வந்தபோது இங்கிலாந்து ரசிகர்கள் சத்தமாகக் குரல் எழுப்பி அவரைக் கேலி செய்தார்கள்.

  61 பந்துகளில் அரை சதமெடுத்த கேப்டன் ஃபிஞ்ச், 115 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். 36-வது ஓவரிலேயே சதத்தை எடுத்துவிட்டதால் இனி வானவேடிக்கைக் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தப் பந்திலேயே ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஃபிஞ்ச். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மித்தும் மேக்ஸ்வெல்லும் விரைவாக ரன்கள் குவிக்க முயன்றார்கள். இதனால் குறைந்த இடைவெளியில் அதிக ரன்கள் கிடைத்தன. 

  8 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல், வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டம் திடீரென இங்கிலாந்து பக்கம் சாய்ந்தது. 

  ஆஸ்திரேலிய அணி 41 ஓவர்கள் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஸ்மித் 22, ஸ்டாய்னிஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai