2019 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதலா?: ரசிகர்களின் ‘அரையிறுதிச் சுற்று’ எதிர்பார்ப்பு!

லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி முதலிடத்தையும் பாகிஸ்தான் அணி 4- ம் இடத்தையும் பெற்றுவிட்டால், இன்னொரு சுவாரசியம் காத்திருக்கிறது... 
2019 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதலா?: ரசிகர்களின் ‘அரையிறுதிச் சுற்று’ எதிர்பார்ப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதின் மூலம் அரையிறுதிச் சுற்றையும் நெருங்கியுள்ளது இந்தியா.

ஆஸ்திரேலியா அரையிறுதிச் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இதர அணிகளுக்கு உள்ள வாய்ப்புகள்:

நியூஸிலாந்து: 7 ஆட்டங்களில் 11 புள்ளிகள்
மீதமுள்ள ஆட்டங்கள்: (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து)

இந்த 2 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் வென்றாலே போதும். நியூஸிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். 

இந்தியா: 6 ஆட்டங்களில் 11 புள்ளிகள் 
மீதமுள்ள ஆட்டங்கள்: (இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை) 

இந்த 3 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் வென்றாலே போதும். இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். 

இங்கிலாந்து: 7 ஆட்டங்களில் 8 புள்ளிகள் 
மீதமுள்ள ஆட்டங்கள்: (இந்தியா, நியூஸிலாந்து)

ஓர் ஆட்டத்தில் வென்றாலே தகுதி பெறலாம். ஆனால் இலங்கை மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் 1 ஆட்டத்திலாவது தோற்கவேண்டும். எனினும் இரண்டு ஆட்டங்களில் வென்றால் இங்கிலாந்துக்கு அரையிறுதி நிச்சயம். 

இலங்கை: 6 ஆட்டங்களில் 6 புள்ளிகள் 
மீதமுள்ள ஆட்டங்கள்: (தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா)

மீதமுள்ள மூன்று ஆட்டங்களையும் வென்றால் அரையிறுதி உறுதி. ஆனால் இரண்டு ஆட்டங்களில் மட்டும் வெற்றி பெற்றால் இதர அணிகளின் தயவு தேவைப்படும். 

வங்கதேசம்: 7 ஆட்டங்களில் 7 புள்ளிகள்
மீதமுள்ள ஆட்டங்கள்: (இந்தியா, பாகிஸ்தான்)

இலங்கை அணி மீதமுள்ள எல்லா ஆட்டங்களிலும் தோற்கவேண்டும். இங்கிலாந்து அணி ஓர் ஆட்டத்துக்கு மேல் ஜெயிக்கக்கூடாது. அப்போது மீதமுள்ள 2 ஆட்டங்களையும் வென்று 11 புள்ளிகளுடன் வங்கதேசம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். 

பாகிஸ்தான்: 7 ஆட்டங்களில் 7 புள்ளிகள் 
மீதமுள்ள ஆட்டங்கள்: (வங்கதேசம், ஆப்கானிஸ்தான்)

மீதமுள்ள இரு ஆட்டங்களையும் வென்றால் பாகிஸ்தான் அணிக்கு 11 புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்து அணி மீதமுள்ள ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வெல்லவேண்டும். இலங்கையும் வங்கதேசமும் குறைந்தபட்சம் தலா ஓர் ஆட்டத்திலாவது தோற்கவேண்டும். அப்போது இங்கிலாந்து 9, வங்கதேசம் 9, இலங்கை 10 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்போது 11 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி முதலிடத்தையும் பாகிஸ்தான் அணி 4- ம் இடத்தையும் பெற்றுவிட்டால், இன்னொரு சுவாரசியம் காத்திருக்கிறது. 

இதன்மூலம், ஜூலை 9 அன்று மான்செஸ்டரில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது மட்டும் நடந்துவிட்டால் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் இருமுறை மோதவேண்டிய சூழல் முதல்முறையாக உருவாகும்.

இதுவரை ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் 1992 முதல் இந்த வருடப் போட்டி வரை இந்தியாவும் பாகிஸ்தானும் 7 முறை மோதியுள்ளன. அனைத்து ஆட்டங்களையும் இந்தியா வென்றுள்ளது. ஆனால் அரையிறுதிச் சுற்றில் இரு அணிகளும் மீண்டும் மோதினால் அது புதிய நிகழ்வாக இருக்கும். உலகக் கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதும் சந்தர்ப்பம் கிடைக்கும். 

இது நடக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com