உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார் ஜோஃப்ரா ஆர்ச்சர்!

இந்தப் போட்டிக்கான இறுதிக்கட்ட அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். முதலில் அறிவிக்கப்பட்ட அணியில்...
உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார் ஜோஃப்ரா ஆர்ச்சர்!

கிரிக்கெட் உலகின் பெரிய போட்டியாக உள்ளது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையாகும். கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான இறுதிக்கட்ட அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்ற அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ டென்லி, டேவிட் வில்லே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த மூவருக்குப் பதிலாக லியம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணியில் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள். 

இங்கிலாந்து அணி: இயன் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஜாஸ் பட்லர், டாம் கரண், லியம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், லியம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் வின்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com