கேமராவுக்குப் பின்னால் சென்று என்னைப் பற்றி பந்துவீச்சாளர்களிடம் கேளுங்கள்: கிறிஸ் கெயில் பெருமிதம்!

கேமரா முன்னால், என்னைக் கண்டு பயம் இல்லை என்பார்கள். கேமராவுக்குப் பின்னால் சென்று...
கேமராவுக்குப் பின்னால் சென்று என்னைப் பற்றி பந்துவீச்சாளர்களிடம் கேளுங்கள்: கிறிஸ் கெயில் பெருமிதம்!

கிரிக்கெட் உலகின் பெரிய போட்டியாக உள்ளது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையாகும். கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

5-வது உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில். இப்போதும் பந்துவீச்சாளர்கள் என்னைக் கண்டு பயப்படவே செய்கிறார்கள் என்று பெருமிதமாகக் கூறுகிறார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

என் தலைக்கு இளைய வீரர்கள் குறிவைக்கிறார்கள். முன்புபோல அவர்களை எதிர்கொள்வது சுலபமல்ல. முன்பு நான் துடிப்புடன் இருந்தேன். ஆனாலும் என்னைக் கண்டு அவர்கள் பயப்படவே செய்வார்கள். யுனிவர்ஸ் பாஸால் என்ன செய்யமுடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். கிரிக்கெட் உலகில் அவர்கள் சந்தித்த மிக ஆபத்தான கிரிக்கெட் வீரர் நான் தான் என்பதைக் கவனத்தில் கொள்வார்கள். நான் இதை விரும்புகிறேன். பந்துவீச்சாளர்களுக்கு எதிரான மோதலை மிகவும் விரும்புகிறேன். சவால் இருக்கும்போது அது கூடுதல் சக்தியை அளிக்கிறது. 

பந்துவீச்சாளர்களிடம் சென்று என்னைப் பற்றி கேளுங்கள். கேமரா முன்னால், என்னைக் கண்டு பயம் இல்லை என்பார்கள். கேமராவுக்குப் பின்னால் சென்று கேளுங்கள். என்னைப் பற்றிய பயத்தை வெளிப்படுத்துவார்கள் என்று கூறியுள்ளார். 

கெயில், 289 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 10,151 ரன்கள் எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com