சுடச்சுட

  

  நியூஸிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய அணி தடுமாற்றம்!

  By எழில்  |   Published on : 25th May 2019 05:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nz_pandya1

   

  இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையே கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. காயம் காரணமாக ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 13 வீரர்களுடன் இந்த ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது இந்திய அணி.

  பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாறினார்கள். தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகிய இருவருமே தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். விஜய் சங்கர் விளையாடாததால் 4-ம் நிலை வீரராகக் களமிறங்கிய கேஎல் ராகுல் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். பிறகு விராட் கோலியும் ஹார்திக் பாண்டியாவும் சிறிது நேரம் கூட்டணி அமைத்தார்கள். 24 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த கோலி, கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் போல்ட் ஆனார். 

  ஹார்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 6 பவுண்டரிகள் எடுத்தாலும் அவராலும் நீண்ட நேரம் நிலைக்கமுடியவில்லை. 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு இந்திய அணியைக் கட்டிக்காக்கவேண்டிய பொறுப்பு தோனி வசம் வந்தது. ஆனால் அவர் 17 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் தினேஷ் கார்த்திக்கும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 17 பந்துகள் விளையாடி 1 ரன் மட்டுமே எடுத்தார் புவனேஸ்வர் குமார். சாண்ட்னர் வீசிய 30-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார் ஜடேஜா. 

  இந்திய அணி 35 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. ஜடேஜா 47, குல்தீப் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai