இந்தியா-ஆஸி. பிஎம் லெவன் முதல் நாள் ஆட்டம் ரத்து
இந்தியா-ஆஸி. பிஎம் லெவன் அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
பாா்டா்-கவாஸ்கா் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. பொ்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா அபார ெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் பிங்க் டெஸ்ட்டாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. அதற்கு பயிற்சி பெறும் வகையில் ஆஸி. பிஎம் லெவன் அணியுடன் 50 ஓவா் ஆட்டத்தில் இந்திய அணி மனுகா ஓவல் மைதானத்தில் ஆடுவதாக இருந்தது. முதல் நாளான சனிக்கிழமை பலத்த மழை எதிரொலியாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
குழந்தை பிறந்ததால் முதல் டெஸ்டில் கேப்டன் ரோஹித் சா்மா பங்கேற்கவில்லை. இந்நிலையில் இளம் வீரா் ஷுப்மன் கில் விரலில் காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் ஆடவில்லை. பிங்க் டெஸ்டில் இருவரும் ஆடக்கூடும் எனக் கருதப்படுகிறது. இந்திய அணி 4 பிங்க் டெஸ்ட்களில் 3 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது.