

பாகிஸ்தான் கிரிக்கெட்டர் நசீம் ஷாவின் பூர்விக வீட்டில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குக் காரணம் சொத்து பிரச்னையாக இருக்குமெனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷாவின் பூர்வீக வீடு கைபர் பக்துன்வா மாகாணத்தில் லோவர் திர் மாவடத்தில் அமைந்துள்ளது.
பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா இலங்கைக்குக் எதிரான போட்டியில் விளையாட அணியுடன் தங்கியதால் யாருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிகிறது.
அடையாளம் தெரியாத நபரினால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சொத்துப் பிரச்னைக்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாகாணங்களில் பழங்குடியினங்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி தைமூர் கான் பேசியதாவது:
இந்தப் பகுதிகளில் இருக்கும் பொதுவான பாதுக்காப்பின்மையின் பிரதிபலிப்பாகவே இந்தச் சம்பவம் இருக்கிறது.
இது தொடர்பாக ஒரு குழுவை உருவாக்கி, நசீம் ஷாவின் தந்தை, உறவினர்களைப் பார்த்து விசாரித்து வருகிறோம். மேலும், வீட்டிற்கு பாதுக்காப்பை அதிகரித்துள்ளோம் என்றார்.
வீட்டின் முகப்பு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் பலரும் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.