சிக்ஸர்கள் விளாச தான் பயிற்சி மேற்கொள்வதில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே அடையாத அணியாக வலம் வரும் பஞ்சாப் கிங்ஸ், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் வலுவாக உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா அதிகபட்சமாக 37 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த நிலையில், சிக்ஸர்கள் விளாச தான் பயிற்சி மேற்கொள்வதில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: லக்னௌவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பவர்பிளே முழுவதும் என்னால் பேட் செய்ய முடிந்தது. மிடில் ஓவர்களில் விளையாடி அணிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்க முடிந்தது. சிக்ஸர்கள் விளாசுவதற்காக நான் பயிற்சி மேற்கொள்வது கிடையாது. எத்தனை பந்துகள் விளையாடுகிறேன் என்பதில் மட்டும் கவனம் செலுத்த முயற்சி செய்கிறேன் என்றார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஷ் ஆர்யாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Punjab Kings opener Priyansh Arya has stated that he does not practice specifically to hit sixes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


