40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பதற்றமாக இருந்தேன்; சதம் விளாசிய பிறகு விராட் கோலி பேசியதென்ன?

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனதால் பதற்றமாக இருந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

News image

விராட் கோலி - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :14 மே 2026, 9:17 pm IST

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனதால் பதற்றமாக இருந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராய்பூரில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவினார். அதிரடியாக விளையாடிய அவர் 60 பந்துகளில் 105 ரன்கள் (11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனதால் பதற்றமாக இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த இரண்டு போட்டிகளாக நான் ரன்கள் எடுக்கவில்லை. அதன் காரணமாக நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சதம் விளாசியவுடன் பெரிய அளவில் என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஏனெனில், இந்த வெற்றியின் மூலம் கிடைத்த இரண்டு புள்ளிகள் எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்குத் தெரியும்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நல்ல அழுத்தம் வீரர் ஒருவரின் ஆட்டத்தை மேம்படுத்தும். கடந்த இரண்டு போட்டிகளாக ரன்கள் எடுக்காததால் பதற்றமாக இருந்தேன். அந்த அழுத்தம் அணிக்கு வெற்றி பெற்றுத் தரும் சிறப்பான இன்னிங்ஸை விளையாட உதவியது என்றார்.

Summary

Royal Challengers Bangalore player Virat Kohli has stated that he felt anxious after getting out for a duck in two consecutive matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.