உலகக் கோப்பையில் தென் அமெரிக்க நாடுகள் வெளியேற்றம்: புள்ளிவிவரங்கள் சொல்லும் விநோதக் கதைகள்!

இந்தமுறை போட்டியில் கலந்துகொண்ட 5 தென் அமெரிக்க அணிகளில் நான்கு அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறின...
உலகக் கோப்பையில் தென் அமெரிக்க நாடுகள் வெளியேற்றம்: புள்ளிவிவரங்கள் சொல்லும் விநோதக் கதைகள்!

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளுக்குத் தென் அமெரிக்க நாடுகள் எப்போதும் கூடுதல் வசீகரம் அளிக்கக் கூடியவை. 

இந்தமுறை போட்டியில் கலந்துகொண்ட 5 தென் அமெரிக்க அணிகளில் நான்கு அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறின. 

ஆர்ஜென்டீனா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே ஆகிய நான்கு தென் அமெரிக்க அணிகள் தகுதி பெற்ற நிலையில் பெரு மட்டும் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

எனினும் தற்போது இந்த நான்கு அணிகளுமே அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் போட்டியை விட்டு வெளியேறியுள்ளன.  

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆர்ஜென்டீனாவும் கொலம்பியாவும் தோற்றுப்போய் வெளியேறின.
காலிறுதிச் சுற்றில் பிரேஸிலும் உருகுவேவும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளன.

* இதையடுத்து, நேற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இரு அணிகள் (பிரான்ஸ் & பெல்ஜியம்) மற்றும் இன்று விளையாடவுள்ள நான்கு அணிகள் என ஆறு அணிகளுமே ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்தவை. 

* பிரேஸில் (5), ஆர்ஜென்டீனா(2), உருகுவே (2) ஆகிய அணிகள் ஒட்டுமொத்தமாக 9 உலகக் கோப்பைகளை வென்றுள்ளன. எனினும் இந்தமுறை அரையிறுதிவரை கூட தகுதி பெற முடியாமல் போய்விட்டது. 

* ஐரோப்பாவில் 1958-க்குப் பிறகு எந்தவொரு தென் அமெரிக்க நாடும் உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்தச் சோகம் இன்னமும் தொடர்கிறது. 

அரையிறுதியில் தென் அமெரிக்க நாடுகள் பங்குபெறாத உலகக் கோப்பைப் போட்டிக்ள்

இத்தாலி உலகக் கோப்பை 1934 
இங்கிலாந்து உலகக் கோப்பை 1966
ஸ்பெயின் உலகக் கோப்பை 1982
ஜெர்மனி உலகக் கோப்பை 2006
ரஷிய உலகக் கோப்பை 2018

* நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற 16 அணிகளில் ஆறு அணிகள் மட்டுமே உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவை.

பிரேஸில் - 5 
ஆர்ஜென்டீனா - 2
உருகுவே - 2
ஃபிரான்ஸ் - 1
இங்கிலாந்து - 1
ஸ்பெயின் - 1 

இவற்றில் பிரேஸில், ஆர்ஜென்டீனா, உருகுவே, ஸ்பெயின் ஆகிய அணிகள் தற்போது போட்டியை விட்டு வெளியேறிவிட்டன. பிரான்ஸ் மட்டும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் நிலை இன்று தெரியவரும். இன்று இந்திய நேரம் 7.30 மணிக்கு நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் அந்த அணி ஸ்வீடனை எதிர்கொள்கிறது. 

* மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் இல்லாத உலகக் கோப்பையாக இது மாறிவிட்டது.

* பெல்ஜியம் கால்பந்து அணியின் முன்னேற்றம் மகத்தானது. இதன் வளர்ச்சி அனைத்து அணிகளுக்கும் பாடமாக உள்ளது.

1920: அண்ட்வெர்ப் (பெல்ஜியம்) ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றது. 
1986: உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்று நான்காம் இடம் பெற்றது. 
2007: ஃபிஃபா தரவரிசையில் 71-வது இடம் 
2018: ஃபிஃபா தரவரிசையில் 3-ம் இடம். பத்து வருடங்களில் மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com