2026 ஃபிஃபா உலகக் கோப்பை: அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ தேர்வு

2026 கால்பந்து உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை: அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ தேர்வு

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டித் தொடர் நடத்தும் நாடுகளுக்கான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த நாடுகளான அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் வெற்றிபெற்றுள்ளன.

இந்த ஏலத்தில் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய ஒருங்கிணைந்த நாடுகளுக்கு எதிராக மொராக்கோ போட்டியிட்டது. இதில் ஒருங்கிணைந்த நாடுகளுக்கு ஆதரவாக 134 வாக்குகளும், மோராக்கோவுக்கு ஆதரவாக 65 வாக்குகளும் கிடைத்தன. 

எனவே 2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டித் தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

அதுபோல 2026 உலகக் கோப்பையில் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அரசியலில் எதிர் நிலைப்பாடு கொண்ட ரஷியா (நடப்பு உலகக் கோப்பை நடத்தும் நாடு) அமெரிக்க ஒருங்கிணைந்த நாடுகளுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com