சுடச்சுட

    
    stpetersburgnew_top

    செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (பார்வையாளர்கள் 67,000)
    ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரான செயிண்ட்பீட்டர்ஸ்பர்கில் ரெஸ்டோவிஸ்கி மைதானம் கடந்த 2006-இல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு இறுதியாக 2017-இல் தான் முடிக்கப்பட்டது. ஸெனிட் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அணி இங்கு பயிற்சி மேற்கொள்கிறது. மேலும் இங்கு பிஃபா கன்பெடரேஷன் கோப்பை போட்டிகளும் நடைபெற்றன.
    இந்த மைதானத்தில் 4 லீக் சுற்று ஆட்டங்கள், ஒரு காலிறுதி ஆட்டம், அரையிறுதி, மூன்றாவது இடத்துக்கான ஆட்டங்கள் நடக்கின்றன.

    ஸ்பார்டக் மைதானம் (மாஸ்கோ) மொத்த பார்வையாளர்கள்-42,000


    எஃப் சி ஸ்பார்டஸ் கிளப் அணி பயன்படுத்தி வரும் இந்த மைதானம் 2014-இல் கட்டி முடிக்கப்பட்டது. முதலில் 35 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டு, பின்னர் உலக கோப்பையை கருதி 42 ஆயிரமாக இருக்கைகள் அதிகரிக்கப்பட்டன. மாஸ்கோவில் இரண்டாவது மைதானமாக இது உள்ளது. இங்கு 5 ஆட்டங்கள் நடக்கின்றன.

    டாப் 10 நட்சத்திர வீரர்கள்
    ரஷியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய டாப் 10 நட்சத்திர வீரர்கள்.
    உலகத்திலேயே அதிக மக்களால் விரும்பப்படும் விளையாட்டுகளில் கால்பந்து முதலிடம் வகிக்கிறது. அதிலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகள் பிரபலமானவை. ரஷியாவில் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை போட்டிகள் நடக்கின்றன.
    கடந்த 20 ஆம் நூற்றாண்டில் பிரேசிலன் பீலே, டிகோ மாரடானா ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக அறியப்பட்டனர்.
    இந்நிலையில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடிய டாப் 10 வீரர்கள் வருமாறு:

    டிமோ வெர்னர் (ஜெர்மனி)


    21 வயதே ஆன ஜெர்மனியின் இளம் வீரரான வெர்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த கன்பெடரேஷன்ஸ் கோப்பை போட்டியில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். தங்ககாலணி விருதுக்கான போட்டியில் வெர்னரும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மன் அணியின் தாக்குதல் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். கோல்கள் அடிப்பதிலும், கோலடிக்கும் வாய்ப்பை உருவாக்குவதிலும் வெர்னர் சிறந்து விளங்குகிறார். ஏற்கெனவே பண்டஸ்லீகா லீக் போட்டியில் 5 கோல்களை அடித்துள்ளார்.

    1950 நான்காவது உலகக் கோப்பை: சாம்பியன் உருகுவே


    1950-ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவே இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    1938 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இதனால் நிலவிய பதற்றமான சூழலால் 1942, 1946-இல் நடத்த வேண்டிய உலகக் கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. போரினால் ஐரோப்பா நிலைகுலைந்து போயிருந்தது. இதனால் தென் அமெரிக்காவில் போட்டிகளை நடத்த பிஃபா முடிவு செய்தது. இதன்படி பிரேசில் நாட்டில் போட்டிகள் நடைபெற்றன.
    போட்டியை நடத்தும் நாடு பிரேசில், நடப்புச் சாம்பியன் இத்தாலி போன்றவை நேரடியாக தகுதி பெற்றன. ஜெர்மனி, ஜப்பான் போன்றவை பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. சோவியத் யூனியன், செக், ஹங்கேரி போன்றவை பங்கேற்கவில்லை. இறுதியாக 13 அணிகள் பங்கேற்றன. 6 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு பிரேசில், ஸ்வீடன், உருகுவே, ஸ்பெயின் ஆகியவை அரையிறுதிக்கு முன்னேறின. இறுதியாக நடந்த ஆட்டத்தில் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    மொத்த ஆட்டங்கள் 22
    மொத்த கோல்கள் 88
    பார்வையாளர்கள் 10, 45, 246
    அதிக கோலடித்தவர் அடெமீல் (8)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai