ஒவ்வொரு வாழ்க்கையிலும் உங்களைத்தான் மணப்பேன்: சுரேஷ் ரெய்னா மனைவி உருக்கம்!
தன் கணவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரியங்கா ரெய்னா இவ்வாறு கூறினார்...


நான்கு வருடங்களுக்கு முன்பு பிரியங்கா என்பவரைக் காதல் திருமணம் செய்தார் கிரிக்கெட் வீரர் ரெய்னா.
இந்நிலையில் இந்தத் தம்பதியர் திருமண நாளைத் தற்போது கொண்டாடியுள்ளார்கள். இதற்குச் சமூகவலைத்தளங்களில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். தன் கணவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரியங்கா ரெய்னா இவ்வாறு கூறினார்:
என் ஒவ்வொரு வாழ்க்கையின்போதும் உங்களை நாடி வந்து திருமணம் செய்துகொள்வேன். நான்கு வருடத் திருமண வாழ்க்கையில் மிகச் சிறந்த நண்பராகவும் பக்கபலமாகவும் இருக்கிறீர்கள். எங்களுக்காக நீங்கள் செய்யும் அனைத்துக்கும் நன்றி. திருமண நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...