எட்டு மொழிகளில் பாடல் வரிகள்: புதிய ஐபிஎல் பாடல் வெளியீடு (விடியோ)

ஒவ்வொரு அணி ரசிகர்களும் எப்படிக் கொண்டாடுகிறார்கள், ஐபிஎல் போட்டி அதன் ரசிகர்களுக்கு எவ்வளவு முக்கியமானது...
எட்டு மொழிகளில் பாடல் வரிகள்: புதிய ஐபிஎல் பாடல் வெளியீடு (விடியோ)

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது. 

நாளை (ஏப்ரல் 9) சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பையும் பெங்களூரும் மோதுகின்றன. அடுத்த நாள், மும்பையில் சென்னையும் தில்லியும் மோதுகின்றன. 

இந்தியா, ஐபிஎல் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, ‘என்டர்டெயின்மென்ட் கா ஆல்-ரவுண்டர்’ என்கிற புதிய பிரசாரத்தைச் சில நாள்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்காக ஹாட்ஸ்டார் நிறுவனம் ‘India Ki Vibe Alag Hai’ என்கிற புதிய பாடல் ஒன்றை எட்டு மொழிகளில் உருவாக்கியுள்ளது. ஐபிஎல் போட்டியை ஒவ்வொரு அணி ரசிகர்களும் எப்படிக் கொண்டாடுகிறார்கள், ஐபிஎல் போட்டி அதன் ரசிகர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கும் விதமாகப் பாடலின் விடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நியூகிளியா இசையமைத்துள்ளார். ஐபிஎல் அணிகளை முன்னிறுத்தும் எட்டு நகரங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 9 அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டியின் அனைத்து நேரலை ஆட்டங்களும் புதிய மற்றும் பழைய டிஸ்னி + ஹாட்ஸ்டார்  (ரூ. 399 /12 மாதங்களுக்கு), டிஸ்னி + ஹாட்ஸ்டார் ப்ரீமியம்  (ரூ. 1499 /12 மாதங்களுக்கு) சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், மலையாளம், மராத்தி என 8 மொழிகளில் கிரிக்கெட் வர்ணனை இடம்பெறும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com