நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்கத் தடுமாறுகிறோம்: ரோஹித் சர்மா

நடு ஓவர்களில் இன்னும் சிறப்பாக நாங்கள் விளையாடியிருக்க வேண்டும்.
நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்கத் தடுமாறுகிறோம்: ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியினர் நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்கத் தடுமாறுகிறார்கள் என அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற மும்பை - தில்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தில்லி 19.1 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் அடித்து வென்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய மிஸ்ரா, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியினால் சென்னை அணியைப் பின்னுக்குத் தள்ளி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது தில்லி அணி. ஆர்சிபி அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

மும்பை அணியின் பேட்டிங் பற்றி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

ஆரம்ப ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த பிறகு நடு ஓவர்களில் இன்னும் சிறப்பாக நாங்கள் விளையாடியிருக்க வேண்டும். இந்தப் பிரச்னை மீண்டும் மீண்டும் தொடர்கிறது. நல்ல தொடக்கத்தை எங்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. பேட்ஸ்மேன்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

தில்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 6 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் 15 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் மட்டும் எடுத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com