கே.எல்.ராகுல் அபாரம்: மும்பையை வென்றது பஞ்சாப்

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கே.எல்.ராகுல் அபாரம்: மும்பையை வென்றது பஞ்சாப்
கே.எல்.ராகுல் அபாரம்: மும்பையை வென்றது பஞ்சாப்

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் 16-வது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

டி காக் 3 ரன்களில் வெளியேற மற்றொரு புறம் ரோஹித் நிலைத்துநின்று ஆடினார். சிறப்பாக விளையாடிய அவர் 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோரைத் தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை.

27 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பொல்லார்ட் 12 பந்துகளில் தன் பங்கிற்கு 16 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனவே, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடினர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 52 பந்துகளில் அரை சதம் கடந்து 60 ரன்கள் குவித்தார்.

மயங்க் அகர்வால் 25 ரன்களில் வெளியேற அடுத்து களம் கண்ட கெயில், கே.எல்.ராகுலுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 35 பந்துகளில் 42 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருவரின் அதிரடியால் பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 132 ரன்களை எடுத்தது. இதன் மூலம் மும்பை அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com