கேப்டன் சஞ்சு நிதானம்: கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் சஞ்சு நிதானம்: கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் (சனிக்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதன்படி முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

134 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர்.

வருண் சக்ரவர்த்தி வீசிய 4-வது ஓவரில் பவுண்டரி அடித்த பட்லர் அடுத்த பந்திலேயே 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஜெய்ஸ்வால் துரிதமாக ரன் சேர்த்து வந்தார். 22 ரன்கள் சேர்த்த அவர் ஷிவம் மவி வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இதனால், பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் சஞ்சு சாம்சனுடன் இணைந்து பாட்னர்ஷிப் அமைத்து வந்த ஷிவம் துபே 22 ரன்கள் சேர்த்த நிலையில் வருண் சக்ரவர்த்தி சுழலில் சிக்கினார்.

அடுத்து களமிறங்கிய ராகுல் தெவாதியா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 5-க்குக் கீழ் இருந்ததால் ராஜஸ்தானுக்கு விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் நெருக்கடி இல்லை.

கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 21 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது.

கேப்டன் சஞ்சு மற்றும் டேவிட் மில்லர் மேற்கொண்டு விக்கெட்டைப் பறிகொடுக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.

18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம்சன் 42 ரன்களும், மில்லர் 24 ரன்களும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com