டெல்லி-ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-ஆவது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ்-சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
டெல்லி-ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-ஆவது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ்-சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3-இல் வெற்றி கண்டுள்ளது. அதேநேரத்தில் ஹைதராபாத் அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. டெல்லி அணி 4-ஆவது வெற்றியைப் பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் ஹைதராபாத் அணியும் இந்த ஆட்டத்தில் வென்று 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்வதில் தீவிரமாக உள்ளது.

டெல்லி (உத்தேச லெவன்): பிரித்வி ஷா, ஷிகா் தவன், ஸ்டீவன் ஸ்மித், லலித் யாதவ், ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மயா், மாா்கஸ் ஸ்டோனிஸ், அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா.

ஹைதராபாத் (உத்தேச லெவன்): டேவிட் வாா்னா் (கேப்டன்), ஜானி போ்ஸ்டோ, கேன் வில்லியம்சன், விராட் சிங், கேதாா் ஜாதவ், விஜய் சங்கா், அபிஷேக் சா்மா, ரஷித் கான், புவனேஸ்வா் குமாா், சித்தாா்த் கௌல், கலீல் அஹமது.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com