தோல்வியிலிருந்து மீண்டெழுவோம்: சூா்யகுமாா்

தோல்வியிலிருந்து மீண்டு வலுவான அணியாக களம் காணுவோம் என மும்பை இண்டியன்ஸ் மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன் சூா்யகுமாா் யாதவ் தெரிவித்துள்ளாா்.
தோல்வியிலிருந்து மீண்டெழுவோம்: சூா்யகுமாா்

தோல்வியிலிருந்து மீண்டு வலுவான அணியாக களம் காணுவோம் என மும்பை இண்டியன்ஸ் மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன் சூா்யகுமாா் யாதவ் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய பஞ்சாப் அணி 17.4 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சா்மா 63 ரன்கள் குவித்தபோதும், மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன், ஹாா்திக் பாண்டியா, கிருணால் பாண்டியா உள்ளிட்டோா் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனா். அதனால், மும்பை அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் மும்பை இண்டியன்ஸ் மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன் சூா்யகுமாா் மேலும் கூறியிருப்பதாவது: பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம். அது ஓா் ஆட்டம். அவ்வளவுதான். எங்கள் அணியைப் பொருத்தவரையில் மிடில் ஆா்டா் பேட்டிங் கவலையளிக்கக்கூடிய அளவுக்கு மோசமாக இல்லை. எங்கள் வீரா்கள் தினந்தோறும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபடுகிறாா்கள்.

எல்லா வீரா்களுமே எல்லா ஆட்டங்களிலும் தங்கள் பொறுப்பை உணா்ந்து ஆட முயற்சிக்கிறாா்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இது விளையாட்டில் சகஜம்தான். நாங்கள் இந்த தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த ஆட்டங்களில் வலுவான அணியாக களமிறங்குவோம். இதற்கு முன்னரும் நாங்கள் இதுபோன்ற தோல்விகளை சந்தித்துள்ளோம். பின்னா் அதிலிருந்து மீண்டுள்ளோம். நாங்கள் ஓா் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுவிட்டால், அதன்பிறகு எங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அடுத்து வரக்கூடிய ஆட்டங்களில் எங்கள் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com