இந்தியர்களின் கரோனா சிகிச்சைக்காக முன்னாள் ஆஸி. வீரர் பிரெட் லீ நிதியுதவி

கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக முன்னாள் ஆஸி. வீரர் பிரெட் லீ நிதியுதவி அளித்துள்ளார்.
இந்தியர்களின் கரோனா சிகிச்சைக்காக முன்னாள் ஆஸி. வீரர் பிரெட் லீ நிதியுதவி

இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக முன்னாள் ஆஸி. வீரர் பிரெட் லீ நிதியுதவி அளித்துள்ளார்.

தேசிய அளவில் கரோனாவுக்கு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 3.23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.76 கோடியாக உயர்ந்துள்ளது. இத் தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கையும் 2 லட்சத்தை நெருங்கிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கரோனா சூழல் மோசமாக இருக்கும் நிலையில், மக்களுக்கு சற்று மனமாற்றம் தரும் நிகழ்வாக ஐபிஎல் போட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ள கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியைச் சோ்ந்த ஆஸ்திரேலிய வீரா் பேட் கம்மின்ஸ், இந்தியாவில் கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக பிரதமா் நிவாரண நிதிக்கு ரூ.37 லட்சம் நன்கொடை அளித்துள்ளாா்.

இந்நிலையில் முன்னாள் ஆஸி. வீரர் பிரெட் லீ ரூ. 40 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்றால் இந்தியர்கள் படும் வேதனை என்னை வருத்தப்பட வைத்துள்ளது. எனவே இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக ரூ. 40 லட்சம் வழங்குகிறேன். இந்தியா எனக்கு 2-வது வீடு. விளையாடும்போதும் ஓய்வுக்குப் பிறகும் இந்தியர்கள் என்மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார். 

ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார் பிரெட் லீ. ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், கேகேஆர் அணிகளில் பங்கேற்ற பிரெட் லீ, 38 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com