ருதுராஜ், டு பிளெஸ்ஸி மிரட்டல்: சென்னை அசத்தல் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ருதுராஜ், டு பிளெஸ்ஸி மிரட்டல்: சென்னை அசத்தல் வெற்றி


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர்.

இருவரும் தொடக்கத்தில் நிதானம் காட்டி படிப்படியாக அதிரடிக்கு மாறினர். பவர் பிளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது.

பவர் பிளேவில் டு பிளெஸ்ஸி ஆதிக்கம் செலுத்திய நிலையில் ருதுராஜ் மெதுவாக ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். இதனால், சென்னையின் ரன் ரேட் ஓவருக்கு 9-ஐத் தொட்டது.

சித்தார்த் கௌல் பந்தில் 2 ரன்கள் எடுத்த டு பிளெஸ்ஸி 32-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அதேசமயம் சென்னையின் ஸ்கோரும் விக்கெட் இழப்பின்றி 100-ஐத் தொட்டது.

இதையடுத்து. சுசித் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த ருதுராஜ் 36-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அடுத்து ரஷித் கான் ஓவரிலும் 3 பவுண்டரிகள் அடித்து ருதுராஜ் மிரட்டினார். ஆனால், அதே ஓவரில் போல்டும் ஆனார். அவர் 44 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார்.

ரஷித் கானின் அடுத்த ஓவரில் மொயீன் அலி 2 பவுண்டரிகள் அடித்தாலும், அதே ஓவரில் அவரும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் டு பிளெஸ்ஸியும் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா விக்கெட்டை இழக்காமல் சென்னையின் வெற்றியை உறுதி செய்தனர்.

18.3 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா 6 ரன்களும், ரெய்னா 17 ரன்களும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com