20-25 ரன்கள் குறைவு: தவறை ஒப்புக்கொண்ட சஞ்சு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் 20-25 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்குக் காரணம் என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
20-25 ரன்கள் குறைவு: தவறை ஒப்புக்கொண்ட சஞ்சு


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் 20-25 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்குக் காரணம் என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததது. இதன்படி முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

மும்பை அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியது:

"பேட்டிங்கில் நிச்சயமாக 20-25 ரன்கள் குறைவு. பேட்டிங்கில் நன்றாக விளையாடி வந்தோம். ஆனால், சரியாக முடிக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் அவர்களது பணியை சிறப்பாக செய்கின்றனர். ஆனால், ரன்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு பேட்ஸ்மேனாக நல்ல ஸ்கோரைக் குவிக்க வேண்டும்.

இது நல்ல ஆடுகளம். பேட்டுக்கு பந்து நன்றாகத்தான் வந்தது. மும்பை இந்தியன்ஸ், அணியாக சிறப்பாக பேட் செய்தது. பேட்டிங்கில் நாங்கள் நிறைய ரன்களைக் குவிக்க வேண்டும். தன்னம்பிக்கை வேண்டும், நேர்மறையாக விளையாட வேண்டும், பயமின்றி விளையாட வேண்டும். இதுதான் தேவை" என்றார் சஞ்சு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com