மும்பைக்கு எதிராக அபாரமாக விளையாடும் ராஜஸ்தான்: 10 ஓவர்களில் 91/2

பட்லர் 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களில்...
மும்பைக்கு எதிராக அபாரமாக விளையாடும் ராஜஸ்தான்: 10 ஓவர்களில் 91/2

மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பையும் ராஜஸ்தானும் இதுவரை தலா 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியைப் பெற இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் இஷான் கிஷனுக்குப் பதிலாக நாதன் கோல்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார். 

பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் ராஜஸ்தான் தொடக்க வீரர்களான பட்லரும் ஜெயிஸ்வாலும் அபாரமாக விளையாடினார்கள். இதனால் 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் கிடைத்தன. பட்லர் 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களில் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜெயிஸ்வால் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடைய விக்கெட்டையும் சஹார் வீழ்த்தினார்.

ராஜஸ்தான் அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com