ஆர்சிபி அணியைத் தோற்கடித்து புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

இந்த வெற்றியினால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆர்சிபி அணியைத் தோற்கடித்து புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

ஐபிஎல் போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வருடம் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிறகு விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் - கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கே வழங்கப்பட்டது.

இந்த வெற்றியினால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 6 5 1 10 +1.475
 2. தில்லி 7 5 2 10 +0.466
 3. பெங்களூர் 7 5 2 10 -0.171
 4. மும்பை 6 3 3 6 +0.071
 5. பஞ்சாப் 7 3 4 6 -0.264
 6. கொல்கத்தா 7 2 5 4 -0.494
 7. ராஜஸ்தான்  6 2 4 4 -0.690
 8. ஹைதராபாத்  6 1 5 2 -0.264

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com