ஜெய்ஸ்வால் மிரட்டல் அடி: சென்னை தோல்வி!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் மிரட்டல் அடி: சென்னை தோல்வி!


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.

190 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர். சாம் கரனின் முதல் 1 பவுண்டரியுடன் தொடங்கினாலும், ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 2-வது ஓவரில் ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள் விளாசி அதிரடியைத் தொடக்கி வைத்தார். இதன்பிறகு, எப்படிப் போட்டாலும் சிக்ஸரும், பவுண்டரியுமாக பறக்கத் தொடங்கியது.

ஹேசில்வுட் வீசிய 5-வது ஓவரில் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி பறக்கவிட 20-வது பந்திலேயே அரைசதத்தை எட்டினார். 5 ஓவர்களில் ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்துவிட்டது.

6-வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர் லீவிஸ் (27) விக்கெட்டை வீழ்த்தினார். கேஎம் ஆசிப் வீசிய அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வாலும் (21 பந்துகள் 50 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

இதனால், ஆட்டம் சென்னை கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானம் காட்ட ஷிவம் துபே விளாசத் தொடங்கினார். 

வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 9.5 ஆக இருந்தது, படிப்படியாக 8-க்குக் கீழ் குறைந்தது. இந்த பாட்னர்ஷிப்பைப் பிரிக்க முடியாமல் சென்னைப் பந்துவீச்சாளர்கள் திணறினர். விளைவு துபேவும் 31-வது பந்தில் அரைசத்தை எட்டினார்.

வெற்றியை நெருங்கியபோது சஞ்சு 28 ரன்களுக்கு ஷர்துல் பந்தில் ஆட்டமிழந்தார். 

அடுத்த வந்த கிளென் பிலிப்ஸ் மற்றும் துபே ராஜஸ்தான் வெற்றியை உறுதி செய்தனர்.

17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துபே 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். பிலிப்ஸ் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com