கிஷன் அதிரடி 50*: 70 பந்துகள் மீதமிருக்க மும்பை மிரட்டல் வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 70 பந்துகள் மீதமுள்ள நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 70 பந்துகள் மீதமுள்ள நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் முக்கியமான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 90 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்தது.

91 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற ரன் ரேட் முக்கியம் என்பதை மும்பை உணர்ந்திருப்பது முதல் ஓவரிலேயே தெரிந்தது.

முஸ்தபிஸூர் ரஹ்மான வீசிய முதல் ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து மிரட்டினார் ரோஹித். குறுகிய நேரத்தில் 22 ரன்கள் சேர்த்த ரோஹித், சேத்தன் சகாரியா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்து 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் விழுந்தபோதும், கிஷன் அதிரடி காட்டி மும்பை வெற்றியை எளிதாக்கினார். முஸ்தபிஸூர் வீசிய 9-வது ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸரைப் பறக்கவிட்ட கிஷன் மும்பை வெற்றியை உறுதி செய்தார். அதேசமயம், தனது அரைசதத்தையும் எட்டினார்.

8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிஷன் 25 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com