ஹைதராபாத் மீண்டும் திணறல் பேட்டிங்: பெங்களூருவுக்கு 142 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
ஹைதராபாத் மீண்டும் திணறல் பேட்டிங்: பெங்களூருவுக்கு 142 ரன்கள் இலக்கு


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்த முறை ஜேசன் ராய் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஜார்ஜ் கார்டன் வீசிய 2-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் பறக்கவிட்ட அபிஷேக் அதே ஓவரில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு, ராய் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தனர். ரன் ரேட்டும் சீரான இடைவெளியில் உயர்ந்து வந்தது.

2-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் வில்லியம்சனை (31) போல்டாக்கினார் ஹர்ஷல் படேல்.

இதன்பிறகு, விக்கெட்டுகள் விழத் தொடங்கின. ஒரு சிக்ஸர் அடித்த ப்ரியம் கர்க் (15), அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராய் (44), அப்துல் சமத் (1), ரித்திமான் சஹா (10) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் ஜேசன் ஹோல்டர் (16) ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஜார்ஜ் கார்டன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com