சென்னை திணறல்: ஆறுதல் அளித்த டு பிளெஸ்ஸி அதிரடி!

​பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. 
சென்னை திணறல்: ஆறுதல் அளித்த டு பிளெஸ்ஸி அதிரடி!


பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. 

நடப்பு ஐபிஎல் சீசன் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்றைய (வியாழக்கிழமை) முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்த சீசன் முழுவதும் சென்னைக்குப் பெரும் பலமாக அமைந்த தொடக்கம், இந்த முறை சோபிக்கத் தவறியது. அர்ஷ்தீப் சிங் வீசிய 4-வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மொயீன் அலி 6 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் 'டக்' அவுட் ஆனார். ராபின் உத்தப்பா (2), அம்பதி ராயுடு (4) ஆகியோர் கிறிஸ் ஜோர்டன் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த முறை நம்பிக்கையளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி 12 ரன்களுக்கு மீண்டும் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால், அணியின் ரன் ரேட் ஓவருக்கு 6-ஐக் கூடத் தொடாமல் இருந்தது.

விக்கெட்டுகளைப் பாதுகாத்து விளையாட வேண்டிய நிர்பந்தத்தால், தொடக்கம் முதல் விளையாடி வந்த பாப் டு பிளெஸ்ஸி நிதானம் காட்டினார்.

17-வது ஓவரிலிருந்து மிரட்டத் தொடங்கினார் டு பிளெஸ்ஸி. 46-வது பந்தில் அரைசதத்தை எட்டிய அவர், பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாகப் பறக்கவிட்டு முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 55 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். டுவைன் பிராவோ முதல் பந்தில் பவுண்டரி அடித்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 15 ரன்களும், பிராவோ 4 ரன்களும் எடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com