பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டம்: சிஎஸ்கே முதலில் பேட்டிங்

பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டம்: சிஎஸ்கே முதலில் பேட்டிங்

பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ள சிஎஸ்கே அணி, முதல் இரு இடங்களில் ஒன்றைக் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது மிகக்கடினம் என்கிற நிலையே உள்ளது. 12 புள்ளிகளுடன் உள்ள மும்பையும் கொல்கத்தாவும் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோற்றாலும் சிஎஸ்கேவை பஞ்சாப் வென்றாலும் அந்த அணிக்கு பிளேஆஃப் வாய்ப்பு அவ்வளவு எளிதாக அமையாது. 

துபையில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே அணியில் மாற்றம் எதுவுமில்லை. பஞ்சாப் அணியில் பூரனுக்குப் பதிலாக ஜார்டன் இடம்பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com