உத்தப்பா, ருதுராஜ் பாட்னர்ஷிப்: 10 ஓவரில் 81 ரன்கள்!

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் 173 ரன்கள் இலக்கை விரட்டி விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் 173 ரன்கள் இலக்கை விரட்டி விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

14-வது ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 1 துபையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதல் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

173 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். அன்ரிச் நோர்க்கியா வீசிய முதல் ஓவரிலேயே டு பிளெஸ்ஸி 1 ரன்னுக்கு போல்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

ஆனால், அடுத்து களமிறங்கிய அனுபவ ராபின் உத்தப்பா முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார்.

ஆவேஷ் கான் வீசிய அடுத்த ஓவரில் 1 பவுண்டரி என விக்கெட் விழுந்த நெருக்கடியை அதிகரிக்கவிடாமல் பார்த்துக்கொண்டார்.

4-வது ஓவரை வீச ககிசோ ரபாடாவை சிக்ஸருடன் வரவேற்றார் ருதுராஜ். இந்த அதிரடியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் ஆவேஷ் கான் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 20 ரன்கள் எடுத்தார். பவர் பிளே முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது.

பவர் பிளே முடிந்தவுடன் டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். அடுத்த 4 ஓவர்களில் சென்னை அணி 1 பவுண்டரிகூட அடிக்கவில்லை.

10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. உத்தப்பா 51 ரன்களுடனும், ருதுராஜ் 27 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com