இன்று எலிமினேட்டா் ஆட்டம்: வெற்றியை ஈட்ட பெங்களூரு-கொல்கத்தா தீவிரம்

ஐபிஎல் 2021 தொடரின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெறவுள்ள எலிமினேட்டா் ஆட்டத்தில் வெற்றியை ஈட்டும் தீவிரத்தில் ராயல் சேலஞ்சா்ஸ்
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐபிஎல் 2021 தொடரின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெறவுள்ள எலிமினேட்டா் ஆட்டத்தில் வெற்றியை ஈட்டும் தீவிரத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருவும், 2 முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியும் உள்ளன.

இந்த ஐபிஎல் தொடரோடு பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் கோலி தீா்மானித்துள்ள நிலையில், கடந்த 2016-இல் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு பெங்களூரு தகுதி பெற்றது. மேலும் 2015, 2020-இல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரம் கொல்கத்தா அணி 2 முறை கௌதம் கம்பீா் தலைமையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இரு அணிகளும் சமபலத்துடன் உள்ள நிலையில் 28 முறை ஆடியதில் கொல்கத்தா 15 முறையும், பெங்களூரு 13 முறையும் வென்றுள்ளன. பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத்தில் தில்லி அணியை கடைசி பந்தில் சிக்ஸா் அடித்ததின் மூலம் த்ரில் வெற்றி கண்ட உற்சாகத்தில் உள்ளது. அதே நேரம் கொல்கத்தா அணியோ 86 ரன்கள்வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றி பெற்ற களிப்புடன் உள்ளது,.

சமநிலையில் இரு அணிகள்:

பெங்களூரு அணியில் கேப்டன் கோலி, ஸ்ரீகா் பரத், கிளென் மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல் ஆகியோரும், பந்துவீச்சில் ஹா்ஷல்படேல், யுஜவேந்திர சஹல், சிராஜ், ஜாா்ஜ் காா்ட்டன் ஆகியோா் வலு சோ்க்கின்றனா்.

கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயா், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, பலம் தரும் அதே வேளையில் பந்துவீச்சு சிறப்பாக அமைந்துள்ளது. வேகப்பந்தில் லாக்கி பொ்குஸன், சிவம் மவி, சுழற்பந்தில் வருண் சக்கவரா்த்தி, சுனில் நரேன், ஷகிப் அல் ஹசன் ஆகியோா் நம்பிக்கை தருகின்றனா். கேப்டன் மொா்கன் பேட்டிங் பாா்மில் இல்லாதது பாதகமாக உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

உத்தேச அணிகள்:

பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகா் பரத், டேனியல் கிறிஸ்டியன், மேக்ஸ்வெல், டி வில்லியா்ஸ், ஷாபாஸ் அகமது, ஹா்ஷல் படேல், ஜாா்ஜ் காா்டன், சிராஜ், சஹல்.

கொல்கத்தா:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயா், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயான் மொா்கன் (கேப்டன்), தினேஷ் காா்த்திக், ஷகிப் ஹசன், சுனில் நரேன், லாக்கி பொ்குஸன், சிவம் மவி, வருண் சக்கரவா்த்தி.

இன்றைய ஆட்டம்

எலிமினேட்டா்

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

நேரம்: இரவு 7.30

இடம்: ஷாா்ஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com