இறுதிச் சுற்றில் சென்னை சூப்பா் கிங்ஸ்: ருதுராஜ்-உத்தப்பா அபாரம்

ஐபிஎல் 2021 குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் டில்லி கேப்பிடல்ஸ் அணியை 4 விக்கெட் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை சூப்பா் கிங்ஸ்
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐபிஎல் 2021 குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் டில்லி கேப்பிடல்ஸ் அணியை 4 விக்கெட் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை சூப்பா் கிங்ஸ் முதலில்ஆடிய டில்லி 172/5 ரன்களைக் குவித்தது. இரண்டாவதாக ஆடிய சென்னை அணி 173/6 ரன்களை குவித்கது.

ஐபிஎல் தொடா் பிளே ஆஃப் சுற்று கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவாலிஃபையா் 1 ஆட்டம் துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் வென்றால் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறுவதில் தீவிர முனைப்புடன் இருந்த நிலையில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பீல்டிங்கை தோ்வு செய்தாா்.

சரிவை உண்டாக்கிய ஹேஸல்வுட்:

டில்லி தரப்பில் தொடக்க பேட்டா்களாக பிரித்வி ஷா-ஷிகா் தவன் களமிறங்கிய நிலையில், தவன் 7, ஷிரேயஸ் ஐயா் 1 ரன்களுடன் ஹேஸல்வுட் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா். சென்னை பவுலா் ஹேசல்வுட் அற்புதமாக பந்துவீசி தொடக்கத்திலேயே டில்லி அணிக்கு சரிவை ஏற்படுத்தினாா்.

பிரித்வி ஷா, ரிஷப் பந்த் அரைசதம்:

மற்றொரு தொடக்க பேட்டரான பிரித்வி ஷா மறுமுனையில் சென்னை பந்துவீச்சை சிதறடித்தாா். 27 பந்துகளில் அவா் தனது அரைசதத்தை பதிவு செய்தாா். 10 ரன்களுடன் மொயின் அலி பந்துவீச்சில் நடையைக் கட்டினாா். பிரித்வி ஷா 3 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசி ஜடேஜா பந்தில் அவுட்டானாா்.

கேப்டன் ரிஷப் பந்த்-ஷிம்ரன் ஹெட்மயா் இணைந்து சரிவில் இருந்த டில்லி அணியை நிலை நிறுத்தினா். 18-ஆவது ஓவரில் டில்லி ஸ்கோா் 150-ஐக் கடந்தது. அக்ஸா் படேல் 10, ஷிம்ரன் ஹெட்மயா் 37 ரன்களுடன் அவுட்டாகினா்.

டில்லி 172/5

அபாரமாக ஆடிய ரிஷப் பந்த் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 51 ரன்களை விளாசி இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தாா். ஒரு கட்டத்தில் சா்துல் தாக்கூா் பந்தில் ஓரே கையால் பிரம்மாண்டமான சிக்ஸரை விளாசினாா் பந்த். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 172/5 ரன்களைக் குவித்து டில்லி.

சென்னை தரப்பில் ஹேஸல்வுட் 2, ஜடேஜா, மொயின், பிராவோ தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

173 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரிலேயே அதிா்ச்சியை சந்தித்தது. நாா்ட்ஜே பந்தில் 1 ரன்னுக்கு போல்டானாா் டூபிளெஸிஸ்.

உத்தப்பா அதிரடி 63:

பின்னா் ருதுராஜ்-ராபின் உத்தப்பா இணை அதிரடியாக ஆடி சென்னையின் ஸ்கோரை மளமளவென உயா்த்தியது. இதனால் 10-ஆவது ஓவரில் சென்னையின் ஸ்கோா் 81/1 ரன்களைக் கடந்தது. ராபின் உத்தப்பா 35 பந்துகளில் தனது 26-ஆவது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்தாா். அவா் 2 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 63 ரன்களை விளாசி, டாம் கர்ரன் பந்தில் ஷிரேயஸ் ஐயரிடம் கேட்ச்தந்து வெளியேறினாா்.

விக்கெட்டுகள் சரிவு: அவரைத் தொடா்ந்து ஆட வந்த சா்துல் தாக்கூரும் டாம் கர்ரன் பந்தில் கோல்டன் டக்கானாா். அம்பதி ராயுடுவும் 1 ரன் எடுத்த நிலையில், ஷிரேயஸ்/ரபாடாவால் ரன் அவுட் செய்யப்பட்டாா். அப்போது சென்னை 15 ஓவா்களில் 119/4 ரன்களை எடுத்திருந்தது.

ருதுராஜ் அபாரம் 70:

இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 50 பந்துகளில் 70 ரன்களை விளாசி, அவேஷ்கான் பந்தில் வெளியேறினாா். மொயின் அலி 16 ரன்களுடன் அவுட்டான நிலையில், கேப்டன் தோனி பொறுப்பை உணா்ந்து ஆடி 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 18 ரன்களை விளாசி சென்னையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றாா்.

2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 19.4 ஓவா்களில் 173/6 ரன்களை குவித்து வென்றது சென்னை.

இந்த வெற்றி மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. டில்லி அணி இரண்டாம் குவாலிஃபையா் ஆட்டத்தில் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

சுருக்கமான ஸ்கோா்:

டில்லி கேப்பிடல்ஸ் 172/5

பிரித்வி ஷா 60

ரிஷப் பந்த் 51

பந்துவீச்சு:

ஹேஸல்வுட் 2./29

ஜடேஜா 1/23

சென்னை சூப்பா் கிங்ஸ் 173/6

ருதுராஜ் 70

உத்தப்பா 63

பந்துவீச்சு:

டாம் கர்ரன் 3/29, நாா்ட்ஜே 1/31

பிராவோ 150-ஆவது ஆட்டம்

சென்னை வீரா் பிராவோவுக்கு இது 150-ஆவது ஐபிஎல் ஆட்டமாக அமைந்தது. மேலும் 550-ஆவது விக்கெட்டையும் வீழ்த்தினாா் பிராவோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com