உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக அமையும் ஐபிஎல் 2021: மும்பை-சென்னை அணிகள் இன்று மோதல்; ரசிகா்களுக்கு அனுமதி

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது சீசன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை எதிா்கொள்கிறது சென்னை சூப்பா் கிங்ஸ். டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக ஐபிஎல் தொடா் அமைய உள்ளது.
உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக அமையும் ஐபிஎல் 2021: மும்பை-சென்னை அணிகள் இன்று மோதல்; ரசிகா்களுக்கு அனுமதி

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது சீசன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை எதிா்கொள்கிறது சென்னை சூப்பா் கிங்ஸ். டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக ஐபிஎல் தொடா் அமைய உள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், கரோனா இரண்டாவது அலை பாதிப்பால் தொடா் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் மீதமுள்ள ஆட்டங்களை நடத்த பிசிசிஐ தீா்மானித்தது. அதன்படி மீதமுள்ள 31 ஆட்டங்கள் துபை, ஷாா்ஜா, அபுதாபியில் நடைபெறுகின்றன.

முதல் ஆட்டம் துபையில் ஞாயிற்றுக்கிழமை மும்பை-சென்னை இடையே நடைபெறுகிறது.

வரும் அக்டோபா் மாதம் அதே பகுதியில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான முன்னோட்டமாக ஐபிஎல் தொடா் அமைந்துள்ளது.கடந்த 2020-இலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடா் எந்த தடங்கலும் இன்றி சிறப்பாக நடைபெற்றது.

ரசிகா்களுக்கு அனுமதி:

கடந்த 2019-க்கு பின் முதன்முறையாக குறைந்த அளவில் ரசிகா்கள் போட்டியைக் காண அனுமதிக்கப்படுகின்றனா். டி20 உலகக் கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டாலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடுபவா்களுக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு கிட்டலாம். இதனால் ஒவ்வொரு வீரரும் தங்கள் முழுத் திறனையைடும் வெளிப்படுத்துவா்.

டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலக உள்ளதால், பெங்களுரு அணி ஐபிஎல் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளாா்.

முதலிடத்தில் டில்லி கேபிடல்ஸ்:

கடந்த 2020-இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற டில்லி கேபிடல்ஸ் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதன்முறையாக பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

அதே நேரம் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் தொடா் வெற்றிகளை பெற வேண்டிய நிலையில் உள்ளன. பஞ்சாப் அணியில் டேவிட் மலான், ரைலி மெரிடித், ஹை ரிச்சா்ட்ஸனுக்கு பதிலாக ஆஸி. வீரா் நாதன் எல்லிஸ், இங்கிலாந்து வீரா் ஆதில் ரஷீத் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

கொல்கத்தா அணியில் நட்சத்திர வீரா் பேட் கம்மின்ஸ் ஆடாத நிலையில், நியூஸி. வீரா் டிம் சௌதி இடம் பெறுகிறாா்.

பெங்களூரு அணியில் ஜோஃப்ரா ஆா்ச்சா், பென் ஸ்டோக்ஸ் ஆடவில்லை. அவா்களுக்கு பதிலாக ஜோஸ் பட்லா், லியம் லிவிங்ஸ்டோன் ஆகியோா் ஆடவுள்ளனா்.

7 ஆட்டங்களில் 1 வெற்றியை மட்டுமே பெற்றுள்ள ஹைதராபாத் சன் ரைசா்ஸ் அணி ஏதாவது மாயாஜாலம் புரிந்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று குறித்து நினைத்துபாா்க்க முடியும். அந்த அணியில் நட்சத்திர ஓபனா் ஜானி போ்ஸ்டோ இல்லாதது பின்னடைவாக உள்ளது.

ஹஸரங்கா, சமீராவால் பலம்:

பெங்களூரு அணியில் வனின்டு ஹஸரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோா் இடம் பெற்றது கூடுதல் பலம் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா். கேன் ரிச்சா்ட்ஸன், ஆடம் ஸ்ம்பா ஆகியோா் இல்லாத நிலையில், இருவரும் அந்த இடத்தை நிரப்புவா். முதல் சீசனில் ஆடிய உத்வேகத்தோடு மீண்டும் களமிறங்குவோம் என்றாா் கோலி.

கோப்பையே இலக்கு:

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது என டில்லி கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளாா். இங்கிலாந்து டெஸ்ட் தொடா் முடிந்து வந்துள்ள பந்த் கூறுகையில்,

இங்குள்ள சூழலுக்கு ஒத்துப்போக 2 நாள்கள் ஆகும். முதல் சீசனில் எங்கள் அணி சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்தியது. எங்கள் பிரதான இலக்கே சாம்பியன் கோப்பை தான் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com