சிஎஸ்கே அணியைக் காப்பாற்றிய ருதுராஜ்: புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

இந்த வெற்றியினால் சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
சிஎஸ்கே அணியைக் காப்பாற்றிய ருதுராஜ்: புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

ஐபிஎல் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது.

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தோ்வு செய்தது. சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே அடித்தது. சென்னை வீரா் ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக சென்னை தனது இன்னிங்ஸில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்தில் தடுமாற, இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அற்புதமாக விளையாடி அணியைக் கரை சேர்த்தார். 88 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். பேட்டிங்கில் அவருக்கு உதவிய பிராவோ, பந்துவீச்சிலும் சிறப்பாகப் பங்களித்தாா்.

இந்த வெற்றியினால் சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 8 6 2 12 +1.223
 2. தில்லி 8 6 2 12 +0.547
 3. பெங்களூர் 7 5 2 10 -0.171
 4. மும்பை 8 4 4 8 -0.071
 5. ராஜஸ்தான் 7 3 4 6 -0.190
 6. பஞ்சாப் 8 3 5 6 -0.368
 7. கொல்கத்தா 7 2 5 4 -0.494
 8. ஹைதராபாத்  7 1 6 2 -0.623

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com