ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக ஆறு தோல்விகள்: நெருக்கடியில் விராட் கோலி

ஐக்கிய அரபு அமீரகம், ஆர்சிபி அணிக்குச் சாதகமான முடிவுகளைத் தருவதில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக ஆறு தோல்விகள்: நெருக்கடியில் விராட் கோலி

ஐக்கிய அரபு அமீரகம், ஆர்சிபி அணிக்குச் சாதகமான முடிவுகளைத் தருவதில்லை.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது ஆர்சிபி அணி. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வி. 

கடந்த வருடம் ஆர்சிபி அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றாலும் கடைசிக்கட்டத்தில் மோசமாக விளையாடித்தான் போட்டியிலிருந்து வெளியேறியது.

முதல் 10 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, லீக் சுற்றில் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோற்றது. நெட் ரன்ரேட் அடிப்படையில் கேகேஆர் அணியைப் பின்னுக்குத் தள்ளி 4-ம் இடம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. எனினும் எலிமினேட்டர் சுற்றில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. இப்படிக் கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்திலும் தோற்றுள்ளது.

6 தோல்விகளிலும் உள்ள ஓர் ஒற்றுமை, ஆர்சிபி அணி இந்த 6 ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்துள்ளது. அதைவிடவும் அபுதாபியில் முதலில் பேட்டிங் செய்த 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஆனால் இதே மைதானத்தில் 2 முறை இலக்கை விரட்டியபோது வெற்றி அடைந்துள்ளது. 

ஆர்சிபி அணியின் குறைகளைக் களைந்து அணியை மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார் விராட் கோலி. 

அபுதாபியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூா் 19 ஓவா்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 10 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் அடித்து வென்றது. வருண் சக்ரவா்த்தியும் ரஸ்ஸலும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து ஆர்சிபி அணியை நிலைகுலைய வைத்தார்கள். படிக்கல் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய கோலி 5 ரன்களிலும் மேக்ஸ்வெல் 10 ரன்களிலும் டி வில்லியர்ஸ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயா் ஜோடி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. ஷுப்மன் கில் 48 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com