அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகள்: 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ராஜஸ்தான்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகள்: 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ராஜஸ்தான்


பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லீவிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே அதிரடி காட்டும் முனைப்பில் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதற்குப் பலனாக பவர் பிளேவில் நிறைய பவுண்டரிகள் கிடைத்தன.

குறிப்பாக இஷான் பொரெல் வீசிய 4-வது ஓவரில் மட்டும் லீவிஸ் 4 பவுண்டரிகளை விளாசினார். 

பவர் பிளேவின் கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங்கை அறிமுகப்படுத்தினார் ராகுல். இதற்குப் பலனாக 3-வது பந்திலேயே லீவிஸ் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ஜெய்ஸ்வால் துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். ஆனால், கேப்டன் சஞ்சு சாம்சன் ஒத்துழைப்பு தராமல் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் துரிதமாக 25 ரன்கள் சேர்த்து அர்ஷ்தீப் பந்திலேயே ஆட்டமிழந்தார். 

எனினும் அடுத்து களமிறங்கிய மஹிபால் லோம்ரர் அடில் ரஷித் சுழலில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரன் ரேட்டை உயர்த்தினார். ஆனால், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 49 ரன்களுக்கு ஹர்பிரீத் பிரார் சுழலில் வீழ்ந்தார்.

சுழற்பந்துவீச்சில் விக்கெட் விழுந்ததால், அடுத்த ஓவரை வீச தீபக் ஹீடா அழைக்கப்பட்டார். இதைப் பயன்படுத்திக்கொண்ட லோம்ரர் அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாச ராஜஸ்தானுக்கு 24 ரன்கள் கிடைத்தன. இந்த அதிரடியால் 16 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முகமது ஷமியும், அர்ஷ்தீப்பும் சிறப்பாகப் பந்துவீசினர். 17-வது ஓவரை வீசிய ஷமி 4 ரன்களை மட்டுமே கொடுத்து ரியான் பராக் விக்கெட்டை வீழ்த்தினார். 18-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் 7 ரன்களை மட்டுமே கொடுத்து லோம்ரர் (17 பந்துகள் 43 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். ஷமி 19-வது ஓவரில் மீண்டும் 3 ரன்களை மட்டுமே கொடுத்து, ராகுல் தெவாடியா மற்றும் கிறிஸ் மோரிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் சேதன் சகாரியா ஒரு பவுண்டரி அடித்தாலும் அடுத்த பந்திலேயே 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் கார்த்திக் தியாகியும் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷான் பொரெல் மற்றும் ஹர்பிரீத் பிரார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com