கொல்கத்தாவிடம் மோசமாகத் தோற்ற ஆர்சிபி: புள்ளிகள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
கொல்கத்தாவிடம் மோசமாகத் தோற்ற ஆர்சிபி: புள்ளிகள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

அபுதாபியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 19 ஓவா்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 10 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் அடித்து வென்றது.

பெங்களூா் இன்னிங்ஸில் தடுமாற்றத்துடன் காணப்பட்ட பேட்டிங் வரிசையை கொல்கத்தா பந்துவீச்சாளர்களான ரஸ்ஸல், வருண் சக்ரவா்த்தி சரித்தனா். பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயா் ஜோடி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இந்த ஆட்டத்தின் மூலம் ஆா்சிபி வீரா்கள் ஸ்ரீகா் பரத், வனிந்து ஹசரங்கா, கொல்கத்தா வீரா் வெங்கடேஷ் ஐயா் ஆகியோா் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் களம் கண்டனா்.

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் இருந்த கொல்கத்தா, 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. 

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 8 6 2 12 +1.223
 2. தில்லி 8 6 2 12 +0.547
 3. பெங்களூர் 8 5 3 10 -0.706
 4. மும்பை 8 4 4 8 -0.071
 5. கொல்கத்தா 8 3 5 6 +0.110
 6. ராஜஸ்தான் 7 3 4 6 -0.190
 7. பஞ்சாப் 8 3 5 6 -0.368
 8. ஹைதராபாத்  7 1 6 2 -0.623

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com