ராஜஸ்தானின் நம்ப முடியாத வெற்றி: புள்ளிகள் பட்டியல் நிலவரம்

ராஜஸ்தானின் இந்த நம்பமுடியாத வெற்றியால் புள்ளிகள் பட்டியலில்...
லோம்ரோர் (ராஜஸ்தான்)
லோம்ரோர் (ராஜஸ்தான்)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பரபரப்பான முறையில் வெற்றி பெற்றுள்ளது.

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களே அடித்தது.

கடைசி இரு ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற 8 ரன்களே தேவைப்பட்டன. 8 விக்கெட்டுகள் மீதமிருந்தன. மார்க்ரமும் நிகோலஸ் பூரனும் நன்கு விளையாடிக் கொண்டிருந்ததால் 19-வது ஓவரிலேயே பஞ்சாப் அணி வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19-வது ஓவரை வீசிய முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற மற்றொரு எளிதான நிலைமையிலும் பஞ்சாப் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் அட்டகாசமான வெற்றியை அடைந்தது ராஜஸ்தான் அணி. கடைசி ஓவரை அற்புதமாக வீசி 1 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த 20 வயது கார்த்திக் தியாகி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

ராஜஸ்தானின் இந்த நம்பமுடியாத வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 8 ஆட்டங்களில் 8 புள்ளிகளை எடுத்து பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகமாக்கியுள்ளது. 

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 8 6 2 12 +1.223
 2. தில்லி 8 6 2 12 +0.547
 3. பெங்களூர் 8 5 3 10 -0.706
 4. மும்பை 8 4 4 8 -0.071
 5. ராஜஸ்தான் 8 4 4 8 -0.154
 6. கொல்கத்தா 8 3 5 6 +0.110
 7. பஞ்சாப் 9 3 6 6 -0.345
 8. ஹைதராபாத்  7 1 6 2 -0.623

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com