மின்னல் வேகத்தில் ரன் குவிக்கும் கேகேஆர்: 6 ஓவரில் 63 ரன்கள்

​மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். பவர் பிளே ஓவர்களில் தொடர்ச்சியாக மிரட்டி வரும் டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கில் 1 சிக்ஸரும், வெங்கடேஷ் 1 சிக்ஸரும் பறக்கவிட்டு அதிரடி தொடக்கத்துக்கு விதை போட்டனர்.

ஆடம் மில்ன் வீசிய 2-வது ஓவரில் வெங்கடேஷ் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசினார். தொடர்ச்சியாக இரண்டு ஓவர்களில் கொல்கத்தா மிரட்டியதால் விக்கெட்டுக்காக 3-வது ஓவரில் ஜாஸ்பிரித் பும்ராவை அறிமுகப்படுத்தினார் ரோஹித் சர்மா.

முதல் பந்தில் கில் 1 பவுண்டரி, 4-வது பந்தில் வெங்கடேஷ் ஒரு பவுண்டரி அடித்தாலும் கடைசி பந்தில் கில் (13) விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.

விக்கெட் விழுந்ததால், மீண்டும் போல்ட்டை பந்துவீச அழைத்தார் ரோஹித். ஆனால், புதிதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதியும் அந்த ஓவரில் பவுண்டரி அடிக்க 5-வது ஓவரிலேயே இடது கை பேட்ஸ்மேன் இருந்தாலும், கிருனால் பாண்டியாவை அறிமுகப்படுத்த வேண்டியக் கட்டாயம் மும்பைக்கு ஏற்பட்டது. இதற்குப் பலனாக பாண்டியா ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 

எனினும், மில்ன் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் மீண்டும் அதிரடிக்கு மாறியது கொல்கத்தா. அந்த ஓவரில் திரிபாதி அடித்த பவுண்டரி உள்பட மொத்தம் 12 ரன்கள் கிடைத்தன.

இதன்மூலம், பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.

வெங்கடேஷ் 15 பந்துகளில் 33 ரன்களுடனும், ராகுல் திரிபாதி 12 பந்துகளில் 16 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

கொல்கத்தா வெற்றிக்கு 84 பந்துகளில் 93 ரன்கள் மட்டுமே இன்னும் தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com