அதிக ரன்கள்: தவானை முந்தி சாம்சன் முதலிடம்!

​நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதிக ரன்கள்: தவானை முந்தி சாம்சன் முதலிடம்!


நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 82 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் சாம்சன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் 433 ரன்கள் குவித்துள்ளார் சஞ்சு சாம்சன். பேட்டிங் சராசரி 54.12. ஸ்டிரைக் ரேட் 141.96. 

நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்:

  • சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 433 ரன்கள்
  • ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்) - 430 ரன்கள்
  • கேஎல் ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்) - 401 ரன்கள்
  • பாப் டு பிளெஸ்ஸி (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 394 ரன்கள்
  • ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 362 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com