ஒரு சிக்ஸர் கூட இல்லை: கொல்கத்தாவுக்கு எதிராக 127 ரன்கள் மட்டும் எடுத்த தில்லி அணி

ஷார்ஜாவில் விளையாடியும் தில்லி அணியால் ஒரு சிக்ஸரும் அடிக்க முடியாமல் போனது.
போல்ட் ஆன ஷ்ரேயஸ் ஐயர்
போல்ட் ஆன ஷ்ரேயஸ் ஐயர்

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தில்லி அணி 20 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்துள்ளது.

தில்லி - கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது. கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் தில்லியும் கொல்கத்தா 4-ம் இடத்திலும் உள்ளன. இந்த ஆட்டத்தில் வென்றால் கொல்கத்தா அணி 4-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கும். தில்லி வென்றால் முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறும். மேலும் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்துவிடும். 

தில்லி அணியில் பிருதிவ் ஷாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் ஸ்டீஸ் ஸ்மித் இடம்பெற்றுள்ளார். கொல்கத்தா அணியில் காயம் காரணமாக ரஸ்ஸல் இடம்பெறவில்லை. அதேபோல பிரசித் கிருஷ்ணாவும் அணியில் இல்லை. இவர்களுக்குப் பதிலாக டிம் செளதியும் தமிழ்நாடு அணிக்காக விளையாடும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியரும் இடம்பெற்றுள்ளார்கள். 

20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த ஷிகர் தவன், ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய ஸ்மித், 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து, ஃபெர்குசன் பந்தில் போல்ட் ஆனார். ஷ்ரேயஸ் ஐயர் 1 ரன்னிலும் ஹெட்மையர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். மேலும் கீழ்வரிசை வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்காததால் தில்லி அணி தடுமாறியது. ரிஷப் பந்த் மட்டும் கடைசி ஓவர் வரை விளையாடி 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

தில்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. ஷார்ஜாவில் விளையாடியும் தில்லி அணியால் ஒரு சிக்ஸரும் அடிக்க முடியாமல் போனது. ஃபெர்குசன், வெங்கடேஷ் ஐயர் தலா, நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com