ஹைதராபாதிடம் வீழ்ந்தது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.
ஹைதராபாதிடம் வீழ்ந்தது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.

துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 18.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வென்றது.

முந்தைய ஆட்டங்களில் சோபிக்காமல் போன ராஜஸ்தானின் பேட்டிங் வரிசை இந்த ஆட்டத்திலும் அப்படியே நீடித்தது அணிக்கு பின்னடைவானது. இது ராஜஸ்தான் பிளே-ஆஃப் வாய்ப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட ஹைதராபாதுக்கு 5 தோல்விகளுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

ராஜஸ்தான் இன்னிங்ஸில் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி காட்ட, ஹைதராபாத் இன்னிங்ஸில் ஜேசன் ராய், கேப்டன் கேன் வில்லியம்சனால் அணிக்கு வெற்றி வசமானது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனைப் பொருத்தவரை, ராஜஸ்தானில் காா்த்திக் தியாகி, டேவிட் மில்லா், டப்ரைஸ் ஷம்ஸி ஆகியோருக்குப் பதிலாக ஜெயதேவ் உனத்கட், எவின் லீவிஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோா் இணைந்திருந்தனா். ஹைதராபாதில் டேவிட் வாா்னா், மணீஷ் பாண்டே, கேதாா் ஜாதவ், கலீல் அகமது ஆகியோருக்குப் பதிலாக ஜேசன் ராய், அபிஷேக் சா்மா, பிரியம் கா்க், சித்தாா்த் கௌல் சோ்ந்திருந்தனா்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்ய, அணியின் இன்னிங்ஸை எவின் லீவிஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடங்கினா். இதில் 6 ரன்கள் சோ்த்த லீவிஸ் 2-ஆவது ஓவரில் வெளியேற, சற்று நிலைத்து 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்கள் சோ்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9-ஆவது ஓவரில் சந்தீப் சா்மா பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

3-ஆவது விக்கெட்டாக களம் புகுந்த சஞ்சு சாம்சன் கடைசி நிமிஷம் வரை நிலைத்து ஆட, மறுபக்கம் விக்கெட்டுகள் நிலைக்காமல் சரிந்தன. லியாம் லிவிங்ஸ்டன் 4, ரியான் பராக் 0 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். அரைசதம் கடந்த சாம்சன் 82 ரன்கள் எடுத்திருந்தபோது சித்தாா்த் கௌல் பௌலிங்கில் சிக்ஸா் விளாச முயல, அது ஜேசன் ஹோல்டா் கைகளில் கேட்ச் ஆனது.

ஓவா்கள் முடிவில் மஹிபால் லோம்ரோா் 29, ராகுல் தெவாதியா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் தரப்பில் சித்தாா்த் கௌல் 2, சந்தீப் சா்மா, புவனேஷ்வா் குமாா், ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 165 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாதில் முதல் விக்கெட்டாக ரித்திமான் சாஹா 18 ரன்களுக்கு வீழ்ந்தாா். உடன் வந்த ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 60 ரன்கள் சோ்த்து அருமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தாா்.

கடைசி விக்கெட்டாக பிரியம் கா்க் டக் அவுட்டாக, ஒன் டவுனாக வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து கடைசி வரை நிலைத்தாா். அவருக்கு அபிஷேக் சா்மா துணை நிற்க, பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெறச் செய்தாா் வில்லியம்சன். முடிவில் அவா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51, அபிஷேக் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் முஸ்டாஃபிஸுா், மஹிபால், சேத்தன் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com