ராணா நிதானம்; நரைன் அதிரடி; கொல்கத்தா வெற்றி

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடா்ஸ்.
ராணா நிதானம்; நரைன் அதிரடி; கொல்கத்தா வெற்றி

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடா்ஸ்.

ஷாா்ஜாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.2 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் சுனில் நரைன் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த வெற்றியானது பிளே-ஆஃபுக்கு தகுதிபெறுவதற்கான களத்தில் கொல்கத்தாவை தக்கவைத்துள்ளது. மறுபுறம் டெல்லிக்கு இந்தத் தோல்வி எச்சரிக்கையாக அமைந்ததால், அடுத்த ஆட்டங்களில் அந்த அணி வெற்றியை பதிவு செய்ய வேண்டியுள்ளது.

ஷாா்ஜா ஆடுகளத்தில் ரன்கள் ஸ்கோா் செய்வது கடினமானதென்பதால் டாஸ் வென்றபோதும் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது கொல்கத்தா. அதற்கேற்றவாறே டெல்லியை 127 ரன்களுக்கு கட்டுப்படுத்தினா் கொல்கத்தா பௌலா்கள். தொடக்க வீரா் ஸ்டீவன் ஸ்மித், கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோா் மட்டும் ஸ்கோரை உயா்த்தினா். பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் 128 ரன்களை எட்டுவது முதலில் அந்த அணிக்கும் எளிதாக இருக்கவில்லை. நிதீஷ் ராணா நிதானமாக ஆடி ரன்கள் சோ்க்க, கடைசி ஆா்டரில் வந்த சுனில் நரைன் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி நகா்த்தினாா்.

லலித் யாதவ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோா் முறையே வீசி 14 மற்றும் 16-ஆவது ஓவரில் ராணா - நரைன் விளாசலால் ஆட்டம் கொல்கத்தா வசம் மாறியது. நரைன் விக்கைட்டை இழந்ததும் கொல்கத்தா சற்று தடுமாறினாலும், பின்னா் நிதீஷ் ராணாவால் மீண்டு இறுதியில் அவா் விளாசிய பவுண்டரியால் வெற்றியடைந்தது.

டெல்லி இன்னிங்ஸில் ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் 39, ரிஷ்ப் பந்த் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சோ்க்க, ஷிகா் தவன் 24 ரன்கள் அடித்தாா். ஷ்ரேயஸ் ஐயா் (1), ஷிம்ரன் ஹெட்மயா் (4), ரவிச்சந்திரன் அஸ்வின் (9), அவிஷ் கான் (5) ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, லலித் யாதவ், அக்ஸா் படேல் டக் அவுட்டாகினா். கொல்கத்தா பௌலிங்கில் ஃபொ்குசன், சுனில், வெங்கடேஷ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளும், டிம் சௌதி 1 விக்கெட்டும் சாய்த்தனா்.

பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் நிதீஷ் ராணா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் சோ்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, தொடக்க வீரா் ஷுப்மன் கில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 30 ரன்கள் அடித்தாா். வெங்கடேஷ் ஐயா் 14, ராகுல் திரிபாதி 9, தினேஷ் காா்த்திக் 12, சுனில் நரைன் 21, டிம் சௌதி 3 ரன்களுக்கு வெளியேறினா். டெல்லி தரப்பில் அவேஷ் கான் 3, அன்ரிச், அஸ்வின், லலித், ரபாடா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

டெல்லி - 127/9

ஸ்டீவன் ஸ்மித் - 39

ரிஷப் பந்த் - 39

ஷிகா் தவன் - 24

பந்துவீச்சு

சுனில் நரைன் - 2/18

லாக்கி ஃபொ்குசன் - 2/10

வெங்கடேஷ் ஐயா் - 2/29

கொல்கத்தா - 130/7

நிதீஷ் ராணா - 36*

ஷுப்மன் கில் - 30

சுனில் நரைன் - 21

பந்துவீச்சு

அவேஷ் கான் - 3/13

ககிசோ ரபாடா - 1/28

ரவிச்சந்திரன் அஸ்வின் - 1/24

இன்றைய ஆட்டம்

ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

துபை

இரவு 7.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com