ராஜஸ்தானில் மீண்டும் போல்ட்: கொல்கத்தா பந்துவீச்சு

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தானில் மீண்டும் போல்ட்: கொல்கத்தா பந்துவீச்சு


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் அமான் கானுக்குப் பதில் ஷிவம் மவி களமிறங்குகிறார்.

ராஜஸ்தான் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரசி வான்டர் டுசன், குல்தீப் சென் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோருக்குப் பதில் கருண் நாயர், ஒபெத் மெக்காய் மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com