மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத்...ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே ஜாஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால், அது நோ-பாலாக அறிவிக்கப்பட்ட பட்லருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
ராஜஸ்தான் அணி
ராஜஸ்தான் அணி

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே ஜாஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால், அது நோ-பாலாக அறிவிக்கப்பட்ட பட்லருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.

 இதனைப் பயன்படுத்தி பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடி தொடக்கம் தந்தது.  பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்த நிலையில், பவர் பிளே முடிந்தவுடன் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் 20 ரன்களுக்கு ரோமாரியோ ஷெபேர்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கிய சிக்ஸர்களாக அடித்து அதிரடி காட்டினார். 

மறுமுனையில் ஓரளவு அதிரடி காட்டி வந்த பட்லர் உம்ரான் மாலிக் வேகத்தில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, தேவ்தத் படிக்கல் தொடக்கத்தில் நிதானம் காட்ட சாம்சன் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து விளையாடினார். பின்னர் படிக்கலும் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கினார். அவர் 41 ரன்களுக்கு உம்ரான் மாலிக் வேகத்தில் ஆட்டமிழந்தார். 

ஆனால், வாஷிங்டன் சுந்தர் வீசிய 16-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு 25-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அரைசதம் அடித்த கையோடு 55 ரன்களுக்கு புவனேஷ்வர் குமார் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.

கடைசி நேர அதிரடிக்கு களமிறங்கிய ஷிம்ரோன் ஹெத்மயர், ஹைதராபாத் பந்துவீச்சை போட்டுத் தாக்க ரன் ரேட் கிடுகிடுவென உயர்ந்தது.

நடராஜன் வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, புவனேஷ்வர் குமார் வீசிய 19-வது அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் நடராஜன் வீசிய கடைசி ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க அணியின் ஸ்கோர் 200-ஐ தாண்டியது. எனினும், நடராஜனின் சிறப்பான யார்க்கர் பந்தால் அவர் 13 பந்துகளில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் மட்டும் நடராஜன் சிறப்பாகப் பந்துவீசி 7 ரன்களை மட்டுமே கொடுத்து ஹெத்மயர், ரியான் பராக் விக்கெட்டை வீழ்த்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் வில்லியம்சன் 2 ரன்களுக்கும் அபிஷேக் சர்மா 9 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை பறி கொடுத்தனர். ராகுல் திரிப்பாதி மற்றும் நிகோலஸ் பூரன் ரன் ஏதும் எடுக்காமலும் அப்தலு சமாத் 4 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார்.

சுந்தர் மற்றும் மார்க்ரம் பொருப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இதன் காரணமாக, 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி சார்பாக சஹல் 22 ரன்களை விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com