ஹசரங்கா சுழலில் சிக்கியது கொல்கத்தா: 128 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஹசரங்கா சுழலில் சிக்கியது கொல்கத்தா: 128 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர், அஜின்க்யா ரஹானே களமிறங்கினர். வெங்கடேஷ் ஐயர் தடுமாற்றமான பேட்டிங்கையே வெளிப்படுத்தினார். இதன் நீட்சி, அவர் 10 ரன்களுக்கு ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். முகமது சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் ரஹானே 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணி விக்கெட்டுகள் விழுந்தாலும், அதிரடி பாணியையே கடைப்பிடித்தனர். ஷ்ரேயஸ் ஐயர் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். நிதிஷ் ராணா சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். ஆனால், கொல்கத்தாவுக்கு இந்த பாணி ஆட்டம் இன்று பலனளிக்கவில்லை. இவர்களுக்கு அடுத்து களமிறங்கிய வீரர்களும் அதிரடி நோக்கத்தை மட்டுமே வெளிப்படுத்தினர்.

இதனால் ராணா 10, ஷ்ரேயஸ் 13, சுனில் நரைன் 12 என வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஷெல்டன் ஜேக்சன் முதல் பந்திலேயே வனிந்து ஹசரங்கா சுழலில் விக்கெட்டை இழந்தார்.

ஆண்ட்ரே ரஸலும் அதே பாணியில் நிதானம் காட்டாமல், அதிரடியை வெளிப்படுத்தினார். எனினும், ஹர்ஷல் படேல் சிறப்பாகப் பந்துவீசியதன் நெருக்கடியால், அவரது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

101 ரன்களுக்கு கொல்கத்தா 9 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி கடைசி விக்கெட்டுக்கு நல்ல பாட்னர்ஷிப் அமைத்து 27 ரன்கள் சேர்த்தனர்.

ஆகாஷ் தீப் வீசிய 19-வது ஓவரில் சிக்ஸரும், பவுண்டரி அடித்த உமேஷ் யாதவ் அதே ஓவரில் சிறப்பான யார்க்கர் பந்தில் போல்டானார்.

18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வருண் சக்ரவர்த்தி 10 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் 18 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரு தரப்பில் ஹசரங்கா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com