கொல்கத்தா நல்ல பந்துவீச்சு: ராஜஸ்தானில் சாம்சன் மட்டும் அரைசதம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
படம்: ட்விட்டர் | ஐபிஎல்
படம்: ட்விட்டர் | ஐபிஎல்


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த முறையும் பவர் பிளேவில் தேவ்தத் படிக்கல் விக்கெட்டை வீழ்த்தி கொல்கத்தாவுக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தார் உமேஷ் யாதவ். இதனால், ராஜஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த திணறியது. சற்று தாக்குப்பிடித்து விளையாடி அதிரடிக்கு மாற முயற்சித்த ஜாஸ் பட்லர் 25 பந்துகளில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று விளையாடி 38-வது பந்தில் அரைசதத்தை எடுத்தார்.

இதனிடையே, கருண் நாயரும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் சற்று அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார். கடைசி நேரத்தில் அதிரடிக்கு உதவ வேண்டிய நேரத்தில் 17-வது ஓவரில் பராக் 12 பந்துகளில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே சாம்சனும் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால், டிம் சௌதி வீசிய 19-வது ஓவரில் ஷிம்ரோன் ஹெத்மயர் 2 சிக்ஸர் விளாச அந்த ஓவரில் ராஜஸ்தானுக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிம்ரோன் ஹெத்மயர் 13 பந்துகளில் 27 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 பந்துகளில் 6 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா தரப்பில் டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், அனுகுல் ராய் மற்றும் ஷிவம் மவி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com